செய்திகள்

மக்களுக்காகவே வாழ்ந்தவர் வாஜ்பாய் - நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்

Published On 2018-08-20 12:16 GMT   |   Update On 2018-08-20 12:16 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
டெல்லி:

பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
Tags:    

Similar News