செய்திகள்

சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு பேரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2018-08-13 05:44 GMT   |   Update On 2018-08-13 05:44 GMT
மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
புதுடெல்லி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
Tags:    

Similar News