நடிகர் அஜித்குமாரின் புத்தாண்டு வாழ்த்து
- புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூர் அருகிலுள்ள வெள்ளகோயில் அருகே கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அஜித் குமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.