2025 REWIND: விருதுகளை தேடும் டிரம்ப்- விருதுகளே தேடி வரும் பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
- 29 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.
புதுடெல்லி:
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, புளோரிடாவில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது அதிபர் டிரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என பெருமையுடன் பேசினார்.
நீண்டகால போர்களை முடிவுக்கு கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ வெளிநாடுகள் அனைத்தும் தங்களின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 10 நாடுகள் தங்களின் உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.
இதுவரை 29 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:
2016:
ஏப்ரல் 3: சவுதி அரேபியா - ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்
ஜூன் 4: ஆப்கானிஸ்தான் - ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான் விருது.
2018, பிப்ரவரி 10: பாலஸ்தீனம் - கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது
2019
ஜூன் 8: மாலத்தீவு - ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது.
ஆகஸ்ட் 24: ஐக்கிய அரபு அமீரகம் - ஆர்டர் ஆஃப் சயீத் விருது.
ஆகஸ்ட் 24: பஹ்ரைன் - கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ் விருது.
2020, டிசம்பர் 21: அமெரிக்கா - லீஜியன் ஆப் தி மெரிட் விருது.
2023:
மே 22: பிஜி - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி விருது
மே 22: பப்புவா நியூ கினியா - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ விருது.
மே 22: பலாவ் - பலாவ் குடியரசு எபகல் விருது.
ஜூன் 25: எகிப்து - ஆர்டர் ஆப் தி நைல் விருது.
ஜூலை 14: பிரான்ஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது.
ஆகஸ்ட் 25: கிரீஸ் - தி கிராண்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர் விருது.
2024:
மார்ச் 22: பூடான் - ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது.
ஜூலை 9: ரஷியா - ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது.
நவம்பர் 17: நைஜீரியா - கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருது.
நவம்பர் 20: டொமினிகா -டொமினிகோ அவார்ட் ஆஃப் ஹானர் விருது.
நவம்பர் 20: கயானா - ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது.
டிசம்பர் 22: குவைத் - தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது.
2025:
மார்ச் 5: பார்படாஸ் - ஹானரி ஆஃப் பிரீடம் விருது.
மார்ச் 11: மொரீஷியஸ் - ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் விருது.
ஏப்ரல் 5: இலங்கை - மித்ர விபூஷணயா விருது.
ஜூன் 16: சைப்ரஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III விருது.
ஜூலை 2: கானா - தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது.
ஜூலை 4: டிரினிடாட் மற்றும் டொபாகோ - தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது
ஜூலை 8: பிரேசில் - தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது.
ஜூலை 9: நமீபியா - ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருது.
டிசம்பர் 16 : எத்தியோப்பியா - கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா விருது
டிசம்பர் 18 : ஓமன் - தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் விருது.