செய்திகள்

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பெண்களிடம் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஓட்டு வேட்டை

Published On 2019-04-08 14:55 IST   |   Update On 2019-04-08 14:55:00 IST
சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

தாம்பரம்:

திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் மேலக் கோட்டையூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராமப்புற பெண்களிடம் அ.தி.மு.க. அரசால் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மகத்தான திட்டங்களான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் பிறக்கும் குழந்தைகளுக்காக பரிசு பெட்டி போன்றவற்றை அ.தி.மு.க. அரசு கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களை பார்த்து வியந்த பிற மாநில அரசுகள் தற்போது அ.தி.மு.க. அரசின் இந்த திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றனர் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அவருடன் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டினர். #LokSabhaElections2019 #ADMK

Tags:    

Similar News