உலகம்
null
உலகின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் வாலண்டினோ கரவானி மறைவு
- உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
- இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேஷன் ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான வாலண்டினோ கரவானி வயது முதிர்வு காரணமாக நேற்று தனது 93-வது வயதில் காலமானார்.
இத்தாலியைச் சேர்ந்த இவர், உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரச குடும்பத்தினர் வரை பலரும் வாலண்டினோவின் வாடிக்கையளர்கள் ஆவர்.
ஆடைகளில் தனித்துவமான சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதில் இவர் உலகப் புகழ் பெற்றவர். இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.
1960-களில் இருந்து பேஷன் துறையில் கொடிகட்டிப் பறந்த இவர் 2008-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.
வாலன்டினோவின் வடிவமைப்புகள் இன்றும் பேஷன் உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.