சினிமா செய்திகள்

சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா

Published On 2026-01-21 02:15 IST   |   Update On 2026-01-21 02:15:00 IST
  • காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.

திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. திரைப்படம் மக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சிக்கந்தர் படம் குறித்து அதன் நாயகி ராஷ்மிகா அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

அவர் பேசியதாவது, "சிக்கந்தர் கதை முதலில் முருகதாஸ் சொன்ன போது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் அதற்கு மாறாக இருந்தது.

பொதுவாக சில படங்களில் அப்படித்தான் நடக்கும். ஒரு கதையைக் கேட்கும்போது, அது ஒன்றாக இருக்கும்.

திரைப்படமாக உருவாகும் போது மாறும். அது சினிமாவில் சகஜம்தான். சிக்கந்தர் படத்திலும் அது நடந்தது" என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News