சினிமா செய்திகள்

போலீஸ் பேமிலி- திரைவிமர்சனம்

Published On 2026-03-14 13:19 IST   |   Update On 2026-03-14 13:19:00 IST
ஜெயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மதுரையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவராகவும், பிரபல ரவுடியாகவும் இருக்கிறார் 'பருத்திவீரன்' சரவணன்.

இவரது மகன் கஞ்சா கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். விசாரணை என்ற பெயரில 4 போலீஸ்காரர்கள் சேர்ந்து சரவணனின் மகளை கடுமையாக தாக்குகிறார்கள். பின்னர் தான் அவர் யாருடைய மகன் என்பது போலீஸ்காரர்களுக்கு தெரிய வருகிறது.

இதனால், அவரை யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு போய் காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர். ஆனால், அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதை அறிந்து போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். தனது மகன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்து விடுகிறது.

இதனால், தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.

மறுபக்கம், உண்மையான கொலை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்து, காவலர்கள் மீதான சரவணின் பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது.

இறுதியில் சரவணனின் மகனை கொலை செய்தது யார் ?, பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

மகன் மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் சரவணன். ஆக்ரோஷமான கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் சரவணன். காமெடி இல்லாமல் குணச்சித்திர நடிப்பை வழங்கியுள்ளார் 'காதல்' சுகுமார். ஏ.எம்.ராஜா மலைச்சாமி, சுரேகா.ஆர், நிஷா துபே, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோர் கேரக்டருக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.

இயக்கம்

லாக்கப் டெத் கதைக்களத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இயக்கியுள்ளார் இயக்குனர் பாலு.எம்.

ஒளிப்பதிவு

ஜெயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இசை

சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ளார் ஜெயா கே.தாஸ்.

ரேட்டிங்-1.5/5

Tags:    

Similar News