Kara | தனுஷ் - ஜி.வி. பிரகாஷ் காம்போவில் புது பாடல் - ரிலீஸ் அப்டேட்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.