சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களால் அதிர்ச்சி அடைந்தேன்- பிரியங்கா சோப்ரா |Vijay

Published On 2026-03-13 11:51 IST   |   Update On 2026-03-13 11:51:00 IST
  • உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படமே ‘தமிழன்’.
  • பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.

விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது முதல்படம் மற்றும் முதல் ஹீரோவை பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'சினிமாவில் எனது முதல்படி தமிழ். என் சக நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்க்கவும் நடனத்தை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் கூடியிருப்பார்கள். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விஜய் ரசிகர் கூட்டத்தை பார்த்த போது அவர் ஒரு கடவுளை போல எனக்கு தோன்றியது. இந்தியாவில் மக்கள் நட்சத்திரங்களை ஆர்வத்துடன் விரும்புகிறார்கள் என பிரியங்கா சோப்ரா மேலும் கூறினார்.

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படமே 'தமிழன்'. அதற்கு பிறகு அவர் பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக மாறினார். விஜய் மீது பிரியங்கா சோப்ராவுக்கு மிகுந்த மரியாதை உண்டு என அவரது தாயார் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News