சினிமா செய்திகள்

அஜித் குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை பரிசளித்த மஹிந்திரா

Published On 2026-03-13 10:25 IST   |   Update On 2026-03-13 10:25:00 IST
துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனிடையே ஈரானும் நேற்றுமுதல் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார்.

அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் பாதுகாப்பாக சென்னை திரும்பினார்.

அஜித் சென்னை திரும்பிய நிலையில், அஜித் குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி பரிசாக வழங்கியுள்ளார்.

நடிகரும் கார் ரேசருமான அஜித் குமாரின் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில், மஹிந்திரா BE FORMULA E EDITION கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News