null
'மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது'- அரசியல் வசனம் பேசி அசத்திய நடிகர் ரவி மோகன்
- நான் தொழிலே அரசியலா பண்றவன் என்று பஞ்ச் டயலாக் பேசியதை பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர்.
- 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது.
தஞ்சையில் இன்று மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமை நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார். பின்பு மேடையில் ஏறி ரசிகர்கள் மத்தியில் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் தனது படங்களில் நடித்த ஒரு சில அரசியல் வசனங்களை பேசி காண்பித்தார். அதில் மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது. நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன். நான் தொழிலே அரசியலா பண்றவன் என்று பஞ்ச் டயலாக் பேசியதை பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சாவூர் வந்தவுடன் ராஜராஜ சோழன் என என்னை பொதுமக்கள் வரவேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இன்று நான் தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வரவேண்டும் என தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.