சினிமா செய்திகள்

TVK Vijay| சென்னை விமான நிலையத்தில் விஜய் குறித்த கேள்விக்கு மவுனம் காத்த திரிஷா

Published On 2026-03-13 14:04 IST   |   Update On 2026-03-13 14:04:00 IST
  • சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது.
  • இது குறித்து உங்களது கருத்து என்ன? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜய்-திரிஷா ஆகியோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் ஒன்றாக பங்கேற்றது விவாத பொருளானது. த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை திரிஷா சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக இன்று விமான நிலையம் வந்தார். அவரிடம் த.வெ.க. தலைவர் விஜய்யும் நீங்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு திரிஷா எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக விமான நிலையத்திற்குள் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News