Dhanush | இயக்குநர் ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்?
இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் மற்றும் எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனுஷ் நடிப்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவரது 'Chhaava' பட வெற்றி பெற்றதை அடுத்து, இந்த பீரியட் படம் இந்திய அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.