விளையாட்டு
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதன்மை சுற்றுக்கு முன்னேறிய அன்மோல், ஆகார்ஷி
- 19 வயதான அன்மோல் கார்ப் கனடா வீராங்கனையை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.
- 24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனையை வீழ்த்தினார்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான அன்மோல் கார்ப், கனடாவைச் சேர்ந்த வென் யு சாங்கை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.
24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனை இஷாாணி பருவாவை வீழ்த்தினர். இதன்மூலம் முதன்மை சுற்றுக்கு இருவரும் முன்னேறினர்.
பி.வி. சிந்து, மாளவிகா பன்சாட் மற்றும் தன்வி ஷர்மா ஆகியோர் தரவரிசை அடிப்படையில் முதன்மை சுற்றில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜூன்- ஹரிஹரன் அம்சகருணன் ஜோடி இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.