டென்னிஸ்

Swiatek | இந்தியன் வெல்ஸ் ஓபன்: காலிறுதியில் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

Published On 2026-03-13 22:14 IST   |   Update On 2026-03-13 22:14:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் இகா ஸ்வியாடெக்கை 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினா வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News