டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: ஜெசிகா பெகுலா, ஸ்வியாடெக் 3வது சுற்றில் வெற்றி #IgaSwiatek

Published On 2026-03-11 01:52 IST   |   Update On 2026-03-11 01:52:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, லாட்வியாவின் ஜெலினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கிரீசின் மரியா சக்காரியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News