டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: 2வது சுற்றில் கோகோ காப், ஜாஸ்மின் பவுலினி வெற்றி #CocoGauff

Published On 2026-03-08 02:05 IST   |   Update On 2026-03-08 02:05:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் அமெரிக்காவின் கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவின் கோகோ காப், உஸ்பெகிஸ்தான் கமீலா ரகிமோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-7 (5-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் பொடபொவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News