டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

Published On 2026-02-27 21:53 IST   |   Update On 2026-02-27 21:53:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மெத்வதேவ் ரூப்லெவ் அல்லது கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News