டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

Published On 2026-02-25 21:59 IST   |   Update On 2026-02-25 21:59:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் மெத்வதேவ் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News