டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

Published On 2026-02-21 01:06 IST   |   Update On 2026-02-21 01:06:00 IST
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
  • அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Tags:    

Similar News