டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய நம்பர் 3 வீராங்கனை
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, குரோசியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட குரோசிய வீராங்கனை 2வது செட்டை 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் குரோசிய வீராங்கனை 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரிபாகினா காயத்தால் விலகினார். இதனால் குரோசிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.