டென்னிஸ்
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்ஸ் டி மினார்
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்தது.
- இறுதிப்போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.