டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் முசோவா

Published On 2026-02-14 22:34 IST   |   Update On 2026-02-14 22:34:00 IST
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
  • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா இறுதிச்சுற்றில் வென்றார்.

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய முசோவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Tags:    

Similar News