டென்னிஸ்
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேரடியாக களமிறங்கிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, அமெரிக்காவின் வாசில் கிர்கோவ்-நெதர்லாந்தின் பர்ட் ஸ்டீவன்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.