ரஞ்சி டிராபி: அரையிறுதி ஆட்டங்கள் வரும் 15-ம் தேதி தொடக்கம்
- அரையிறுதி போட்டிகள் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளன.
- இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிந்தன.
இதையடுத்து, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா
பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்
சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்
டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்
முதல் காலிறுதியில் உத்தரகாண்டும், 2வது காலிறுதியில் ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்காலும், 4வது காலிறுதியில் கர்நாடகாவும் வென்றன.
இந்நிலையில், காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.
முதல் அரையிறுதியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன. 2வது அரையிறுதியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.
பிப்ரவரி 24-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.