டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: 2வது சுற்றில் ஜெசிகா பெகுலா, ஸ்வியாடெக் வெற்றி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கைலா டேவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.