டென்னிஸ்
Anisimova | இந்தியன் வெல்ஸ் ஓபன்: 3வது சுற்றில் அனிசிமோவா, பவுலினி அதிர்ச்சி தோல்வி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய எம்போகா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 5-7, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனிடம்
தோல்வி அடைந்தார்.
முன்னணி வீராங்கனைகளான அனிசிமோவா, பவுலினி ஆகியோர் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.