என் மலர்
டென்னிஸ்

Jannik Sinner | இந்தியன் வெல்ஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ்
- 2-ம் நிலை வீரரான சின்னர் 2 செட்டிலும் டை பிரேக் வரை சென்றே வெற்றி பெற்றார்.
- ஸ்வெரேவ் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிசில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 2-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரேசிலின் பொன்சேகாவை எதிர்கொண்டார். 2-ம் நிலை வீரரான சின்னசருக்கு, பொன்சேகா கடும் சவாலாக விளங்கினார்.
முதால் செட் டை பிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் கடும் போட்டிக்குப் பின் சின்னர் 7(8)-6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் சின்னர் 7(7)-6(4) என வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் 4-ம் நிலை வீரரான் ஜெர்மனியின் ஸ்வெரேவ் 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் தியஃபோ-வை எதிர்கொண்டார். இதில் ஸ்வெரேவ் 6-3, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் தியென் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 18-ம் நிலை வீரரான டேவிடோவிச்சை 4-6, 6-1, 7(7)-6(4) என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
13-ம் தேதி நடைபெறும் காலிறுதியில் ஜானிக் சின்னர்- தியென் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். அதேபேல் ஸ்வெரேவ்- பில்ஸ் ஆகியோர் மோதுகிறார்கள்.






