டென்னிஸ்

Alcaraz | இந்தியன் வெல்ஸ் ஓபன்: அல்காரஸ், மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2026-03-12 05:24 IST   |   Update On 2026-03-12 05:24:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 7-6 (7-2) என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News