உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளக்கோவிலில் தொழிலாளி கொலை - தலைமறைவான 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-06-10 10:57 GMT
  • கூலித்தொழிலாளி கடந்த 7ந் தேதி வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • முன்விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

வெள்ளகோவில் :

முத்தூர் அருகே உள்ள வரட்டு கரை பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43) .கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி அன்று வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை வரட்டுகரை சக்திவேல் மகன் அன்பு குமார் (35), அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன் குமார் (32), முத்தூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (44), சுரேஷ் (38) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

நேற்று காலை போலீசார் அன்புக்குமாரை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 23ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட சிறையில் அன்பு குமார் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள குப்புராஜ், சுரேஷ், பிரவீன் குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News