உள்ளூர் செய்திகள்

 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்த காட்சி.

குறுமைய விளையாட்டு போட்டியில் ஏ.வி.பி., பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்று சாதனை

Published On 2022-09-16 11:17 GMT   |   Update On 2022-09-16 11:17 GMT
  • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
  • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

திருப்பூர் :

குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News