தமிழ்நாடு செய்திகள்
25 காரைக்கால் மீனவர்கள் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
இலங்கை காரைநாகர் எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
படகில் இருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணைக்கு பின்னர் மீனவர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.