உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவினாசி ஒன்றியத்தில் குடிநீர் கேட்டு 3 ஊராட்சி மக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2022-08-25 05:26 GMT   |   Update On 2022-08-25 05:26 GMT
  • மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
  • குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

அவினாசி :

அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மூன்று ஊராட்சி மக்களும் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

தகவல் அறிந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சரிவர தண்ணீர் கிடைக்காததால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மூன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.

அதன்படி மூன்று கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

Tags:    

Similar News