உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை கட்டையால் தாக்கிய வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது

Published On 2023-08-08 11:57 IST   |   Update On 2023-08-08 11:57:00 IST
  • ஆத்திரமடைந்த காவலாளியான 2 பேரும் சேர்ந்து பாலாஜியை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
  • அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அருகே உள்ள சின்னஎலத்தகிரியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் பாலாஜி (வயது23). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜாய்தர்கி (28), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாமகுமார் ராஜ்பவன்சி (24) ஆகிய 2 பேரும் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலாஜி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி சென்றார். அப்போது அவரை பார்த்து வடமாநில தொழிலாளியான பிஜாய்தர்கியும், பாமகுமார் ராஜ்பவன்சியும் சேர்ந்து கேலி, கிண்டல் செய்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் பாலாஜி தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவலாளியான 2 பேரும் சேர்ந்து பாலாஜியை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் வலியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலாஜி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News