தமிழ்நாடு செய்திகள்
அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்! - மு.க.ஸ்டாலின்
- திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
- அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.