உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை-கலெக்டர் தகவல்

Published On 2023-11-10 06:59 GMT   |   Update On 2023-11-10 06:59 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலை மையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் பிற் காலத்தில் குழந்தை தொழி லாளர்களாக மாறுவதை தடுக்கும் வகையில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் கடந்த 13-ந்தேதி சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18-ந்தேதி இளையான்குடி புதூர் மற்றும் 20-ந்தேதி

திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இளையான்குடி புதூர் பகுதியில் 4 பள்ளி செல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகி யோரை அவர்கள் வீட் டிற்கு சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேலும் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்ட றிந்து பள்ளிகளில் சேர்க்கப் பட்டு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News