உள்ளூர் செய்திகள்

விழாவில் சபாநாயகர் அப்பாவு மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

ஷிபா பாராமெடிக்கல் கல்லூரி பட்டமளிப்பு விழா- சபாநாயகர் அப்பாவு பட்டம் வழங்கினார்

Published On 2022-12-05 09:23 GMT   |   Update On 2022-12-05 09:23 GMT
  • ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் பட்டமளிப்பு விழா நடை பெற்றது.
  • விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

நெல்லை:

நெல்லை ஷிபா மருத்துவமனையின் 52-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, 52-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

முதல் பிரதியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் தொழில் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், எம்.கே.எம். முகம்மது நாசர், அகமது கபீர், நெல்லை லாட்ஜ் நிக்மத்துல்லா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மருத்து வர்கள் முருகன், அழகேசன், கிரிஷ் தீபக், அகமது யூசுப், முகம்மது இப்ராஹீம், முகம்மது கனி, ஜியாவுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனை மற்றும் ஷிபா கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Tags:    

Similar News