உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பதவி உயர்வு வழங்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-04 12:27 IST   |   Update On 2023-05-04 12:27:00 IST
  • பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

பரமத்திவேலூர்:

பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தகுதி உடைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். கபிலர்மலை ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவ ணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார், ஒன்றிய பொரு ளாளர் முத்து சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News