உள்ளூர் செய்திகள்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் சீர்வரிசைகள் கொடுத்து ராஜா எம்.எல்.ஏ. திருமணத்தை நடத்தி வைத்தபோது எடுத்தபடம்.

சங்கரன்கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஏழை மணமக்களுக்கு திருமணம்- ராஜா எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

Published On 2023-02-24 09:31 GMT   |   Update On 2023-02-24 09:31 GMT
  • சின்னராஜா-ஐஸ்வர்யா என்ற மணமக்களுக்கு ராஜா எம்எல்ஏ மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
  • மணமக்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டமான கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடந்தது. கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் திருவேங்கடத்தைச் சேர்ந்த சின்னராஜா மற்றும் நெல்லையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மணமக்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்எல்ஏ மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.

தொடர்ந்து மணமக்களுக்கு ரூ. 20,000 மதிப்புள்ள திருமாங்கல்யம், ரூ. 3000 மதிப்பில் மணமக்களுக்கு புத்தாடைகள், திருமணத்திற்கு வந்த மணமக்கள் உறவினர்கள் 20 பேருக்கு ரூ.2000 மதிப்பில் உணவு, மற்றும் ரூ. 1000 மதிப்பில் மாலைகள், ரூ.7,800 மதிப்பில் பீரோ, ரூ.7,500 மதிப்பில் கட்டில், ரூ. 2200 மதிப்பில் மெத்தை, ரூ.190 மதிப்பில் இரண்டு தலையணைகள், ரூ. 180 மதிப்பில் பாய், ரூ. 1000 மதிப்பில் 2 கைக்கடிகாரங்கள், ரூ. 1490 மதிப்பில் மிக்ஸி, ரூ. 3640 மதிப்பில் பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் மாணவரணி வீராசாமி, வெங்கடேஷ், ஜான்சன், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News