உள்ளூர் செய்திகள்
சிவகிரி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
- மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அருண்குமார் மதுவை பதுக்கி வைத்து விற்றது விசாரணையில் தெரியவந்தது.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் அருண்குமார்(வயது 25) என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.