தமிழ்நாடு செய்திகள்

மக்களின் தலைவர் யார் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியும்: EPS-க்கு நாஞ்சில் சம்பத் பதிலடி

Published On 2026-01-29 21:24 IST   |   Update On 2026-01-29 21:24:00 IST
  • எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை.
  • அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?

தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?

அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும்—இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள்? இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்'!

மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்! இதை காலம் விரைவில் புரிய வைக்கும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News