உள்ளூர் செய்திகள்

அரசு உதவி வழங்குவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்- சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் பேச்சு

Published On 2023-09-05 14:32 IST   |   Update On 2023-09-05 14:32:00 IST
  • கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு
  • சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை துறை சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தனர்.

சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் அப்துல்ச மது, உடுமலை ராதாகிருஷ் ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் சட்டசபை இணை செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திர பாண்டியன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதா வது:-

தமிழக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வழங்கிய அறிக்கை விவ ரங்கள் தொடர்பாக மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி வருகிறோம். இதன் ஒருபகுதியாக கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். இதனை நாங்கள் தமிழக முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 6 பேருக்கு நத்தம் நிலங்களில் ஆதிதிராவிடர் திட்டத்தின்கீழ் வீட்டுமனை இணையவழி பட்டா, சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ.19.10 லட்சம் மதிப்பில் லோடு ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கடனுதவிகளை வழங்கினார்.

Tags:    

Similar News