உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் தொடங்கியது

Published On 2022-07-07 09:32 GMT   |   Update On 2022-07-07 09:32 GMT
  • ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
  • அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

ஈரோடு:

தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.

ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.

இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News