உள்ளூர் செய்திகள்

ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்திற்கு வாழைப்பழங்கள் ஏலம்

Published On 2022-08-02 09:46 GMT   |   Update On 2022-08-02 09:46 GMT
  • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
  • மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

கோபி:

கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.

பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News