உள்ளூர் செய்திகள்

கலெக்டர் எஸ்.வினீத்

10-ம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் சரிவு - பள்ளிகள் வாரியாக ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு

Published On 2022-06-21 07:51 GMT   |   Update On 2022-06-21 07:51 GMT
  • திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.
  • அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 14,804 மாணவா்கள், 14, 827 மாணவிகள் என மொத்தம் 29,631 போ் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

இதில்12,459 மாணவா்கள், 13,753 மாணவிகள் என மொத்தம் 26,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இதில், மாணவா்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. திருப்பூா் கல்வி மாவட்டமானது மாநில அளவில் 30 வது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இருந்து 30 வது இடத்துக்கு சரிவடைந்தது. திருப்பூா் மாவட்டமானது கடந்த 2018 ம் ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தோ்வில் 97.18 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 7 -வது இடத்தைப் பிடித்திருந்தது. இதைத் தொடா்ந்து, 2019 ஆம் ஆண்டில் 98.53 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 2020, 2021 ம் ஆண்டில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய பொதுத்தோ்வில் 10-ம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி விகிதமானது கடந்த 2019 ம் ஆண்டைக்காட்டிலும் 10.07 சதவீதம் சரிவடைந்துள்ளதுடன் மாநில அளவில் 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

இது குறித்து கலெக்டர் எஸ்.வினீத் கூறியதாவது :-

10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 30 வது இடமும், பிளஸ்- 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 7 -வது இடத்தையும் திருப்பூா் பிடித்துள்ளது. 10-ம்வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடா்பாக பள்ளிகள் வாரியாக ஆய்வுகள் நடத்தப்படும். இதன் பின்னா் அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

Tags:    

Similar News