உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது தொடர்பான சர்வதேச தின விழா.

தஞ்சையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-20 10:13 GMT   |   Update On 2022-11-20 10:13 GMT
  • நிகழ்ச்சியில்தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.
  • விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான சர்வதேச தின விழா நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்இ ன்ஸ்பெக்டர்கள் செந்தி ல்வேலன், ராமநாதன் , ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் விஜயகுமார், தனிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் ஜோதிலட்சுமி, கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.

பின்னர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ‌அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

இதையடுத்து அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News