உள்ளூர் செய்திகள்
கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது.
- கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று.
சேலம்:
சேலம், கருப்பூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம். கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று.
சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அப்படையில் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.