தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் - பிரேமலதா

Published On 2026-01-01 14:02 IST   |   Update On 2026-01-01 14:02:00 IST
  • போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாடு என்ற பெயருடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

* போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.

* தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி முடியும் நிலையிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

* அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மக்களுக்கு நல்லது நடந்தால் தே.மு.தி.க. வரவேற்கும்.

* கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

* தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News