உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்-அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு
- கொடைவிழாவில் மேளம் அடிக்குமாறு கூறி வேலாயுதம் தகராறு செய்துள்ளார்.
- வேலாயுதம், அவரது தம்பி சுடலைகுமார் ஆகியோர் சேர்ந்து கண்ணனை தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவின் போது அதே ஊரை சேர்ந்த வேலாயுதம் (வயது 23) மேளம் அடிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை கண்ணன் (30) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வேலாயுதம், அவரது தம்பி சுடலைகுமார் (22) ஆகியோர் சேர்ந்து கண்ணனை தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சகோதரர்களை வலைவீசி தேடி வருகிறார்.